அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 26

காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான்

விடை – புல்லாங்குழல்

அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான்

விடை – குளிர்

சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள்

விடை – மின்விசிறி

அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?

விடை – வாழைப்பூ

ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம்

விடை – தேன் கூடு

பேசாத வரை நான் இருப்பேன் பேசினால் நான் உடைந்துவிடுவேன் நான் யார்?

விடை – அமைதி

அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது

விடை – தண்ணீர்

நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

விடை – கைகாட்டி

தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

விடை – அன்னாசிப்பழம்

ராஜா, ராணி உண்டு நாடு அல்ல இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?

விடை – காட்ஸ்

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 25
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *