
தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?
விடை – உப்பு
கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள்
விடை – சேவல்
சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
விடை – கிளி
தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும்
விடை – உரோமம்
காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
விடை – பாம்பு
பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து
விடை – தேன்
சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
விடை – பப்பாளி விதைகள்
காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய
பட்சி – அது என்ன?
விடை – சேவல்
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது
விடை – சங்கு
ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை
விடை – குடை