வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும்
விடை – மழை
மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
விடை – மஞ்சள்
காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?
விடை – தவளை
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
விடை – கண்ணீர்
நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
விடை – வெங்காயம்
தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான்
விடை – உப்பு
சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
விடை – தீக்குச்சி
நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
விடை – பச்சை குத்துதல்
ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது
விடை – எறும்புகள்
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
விடை – ஊதுபத்தி