மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
விடை – சிலந்தி
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
விடை – முதுகு
வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
விடை – பூட்டும் திறப்பும்
கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
விடை – மாதுளம்பழம்
காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு
விடை – மரம்-கரி-நெருப்பு.
என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை நான் மறைக்கப்பட வேண்டியவன்
விடை – இரகசியம்
நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?
விடை – மணிக்கூடு
மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது
விடை – ஈசல்
நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடி நடந்தான் அவன் யார்?
விடை – பென்சில்
விரல் இல்லாமலே ஒரு கை
விடை – தும்பிக்கை