அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 12

பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?

விடை – கிளி

இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

விடை – நிலா

ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?

விடை – கண்ணீர்

அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?

விடை – அம்மி குளவி

ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி அது என்ன?

விடை – மூக்கு

ஊரெல்லாமல் ஒரே விளக்கு அதற்கு ஒரு நாள் ஒய்வு அது?

விடை – சந்திரன்

உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன?

விடை – அன்னாசிப் பழம்

குண்டுச் சட்டியில் கெண்டை மீன் அது என்ன?

விடை – நாக்கு.

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

விடை – மெழுகுத்திரிவத்தி

நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?

விடை – நாய்

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 11
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *