நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
விடை – பென்சில்
எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
விடை – மின் விசிறி
வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
விடை – உழுந்து
முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள் அவள் யார்?
விடை – நாக்கு
கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?
விடை – தேங்காய்
பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை அது என்ன?
விடை – வானொலி பெட்டி
கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
விடை – சோளப்பொத்தி
வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?
விடை – பாம்பு
உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடை – அஞ்சல் பெட்டி.
இது ஒரு பூ முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும் அது என்ன?
விடை – சூரிய காந்தி