அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 9

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை – விக்கல்

குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்

விடை – கரன்டி

அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

விடை – வெங்காயம்

பாலிலே புழு நெளியுது அது என்ன?

விடை – பாயாசம்

வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

விடை – ஆறு

மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?

விடை – பஞ்சு

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன?

விடை – தென்னை

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

விடை – கொசு

மழையில் பிறந்து வெயிலில் காயுது?

விடை – காளான்

அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்?

விடை – பந்து

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 8
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *