கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
விடை – நிழல்
நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
விடை –
சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
விடை – வாழைப்பழம்
ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன?
விடை – வாய்
கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான் அவன் யார்?
விடை – படகு
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?
விடை – குயில்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
விடை – நிலா
பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
விடை – மயில்
அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
விடை – கோலம்
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
விடை – எறும்புக் கூட்டம்