அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 3

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

விடை – பட்டுத்துணி

படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?

விடை – பட்டாசு

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?

விடை – பற்கள்

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

விடை – அகப்பை

காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?

விடை – சூரியன்

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

விடை – சோளக்கதிர்

கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

விடை – உப்பு

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?

விடை – கடல்

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

விடை – நிழல்

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

விடை – சைக்கிள்

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 2
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *