அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 1

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடை – தேள்

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

விடை – தலைமுடி

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

விடை – வெங்காயம்

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

விடை – கரும்பு

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

விடை – விழுது

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

விடை – பட்டாசு

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன்
மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

விடை – மூச்சு

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

விடை – பூரி

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

விடை – காகம்

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

விடை – வெண்டைக்காய்

Previous post இரண்டுல ஒன்னு பார்த்திடலாம் பிக்பாஸ் 7
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *