திருவண்ணாமலையில் கிரிவலம் நேரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Previous post அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்
Next post ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *