பூஜை புனஸ்காரம் என்று இரண்டையும் சேர்த்துத் தான் சொல்லுவார்கள்.
பூஜை என்பது மந்திரங்கள் ஓதி மலர்களால் அர்ச்சிப்பது, மணி அடித்து கற்பூரம் காட்டுவது, நைவேத்தியம், எல்லாம் அடங்கியது.
புனஸ்காரம் என்றால் சிவனுக்கு வாசனை திரவியமான புனுகு பூசுவது ஆகும்.
கும்பகோணம் அருகே உள்ள திருக்கருகாவூர் என்ற திருத்தலத்தில் உள்ள கர்பரக்ஷாம்பிகா சமேத முல்லை வன நாதர் திருக்கோயிலில் இன்றளவும் முல்லை வனநாதர் லிங்கத்துக்கு புனுகு பூசி பூஜை செய்யப்படுகிறது.
இந்த லிங்கத்தின் மேல் முல்லைக்கொடி படர்வது போன்று அமைப்பு உள்ளது விசேஷம்.
கருவுற்றிருக்கும் மகளிர்க்கு சுகப்பிரசவம் ஆக இந்த கோவிலின் அம்பாளுக்கு பூஜை செய்து, அம்பாளின் பிரசாதமாக கிடைக்கும் எண்ணையை தடவுவது வழக்கம்.