ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊராட்சி மணி அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.