ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதியம் 1 மணி முதல் 3 வரை வரை ஏழுமலையானுக்கு ஸ்நான திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.