திருப்பதியில் தங்க தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது.

கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர்.

இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

மேலும் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.

இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 

Previous post புரட்டாசி முதல் சனிக்கிழமை
Next post பிக்பாஸ் சீசன் 7 கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *