X தளத்தை பயன்படுத்த கட்டணம்
X (முன்பு ட்விட்டர்) உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்து வரும் நிலையில், சமீபத்தில் டுவிட்டரின் பெயரை X என்று மாற்றியுள்ளார்.
மேலும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக்கை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். தற்போது இதனை பயன்படுத்துவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள நிலையல், மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் தெளிவாகவே புரிகின்றது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் டுவிட்டர் விளம்பர வருவாய் 60 சதவீதம் குறைந்துள்ள நிலையில், விளம்பரம் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றது. ஆனால் தனியுரிமையை மனதில் வைத்து விளம்பரங்களைக் குறைக்க பல நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எலான் மஸ்க் Xஐ இயக்க, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணமாக சில ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
மொபைல் ரீசார்ச் போன்று குறிப்பிட்ட காலத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், குறித்த பயனர்கள் இவ்வாறு கட்டணம் கட்டுவதால் விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்க்கலாம் என்று கூறப்படுகின்றது.
இணையப் பதிப்பில் இதை பெற மாதக் கட்டணம் ரூ.650 மற்றும் மொபைல் பதிப்பில் ரூ.900 கட்டணம் செலுத்த வேண்டும். ஆண்டு சந்தாவாக ரூ. 6800 செலுத்த வேண்டும், இதில் பயனர்கள் பல கூடுதல் அம்சங்களுடன் ப்ளூ டிக் பெறுகிறார்கள்.