எடையைக் குறைத்த குஷ்பு மாடர்ன் லுக்
நடிகை குஷ்பு ஹீரோயினாக நடிக்கும் போது மெலிவாக இருந்து திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் பெற்றப் பின் அதிக உடல் எடையுடன் இருந்து மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியிருக்கிறார்.
நடிகை குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர்.
நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.