ஆண்மையை அதிகரிக்க செய்யும் முருங்கைக் காயின் மருத்துவகுணம்
முருங்கைக்காயை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
அதில் அடங்கியுள்ள அதிகப்படியான வைட்டமின் -சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
ஆஸ்துமா மற்றும் கல்லீரல் மற்றும் கணையம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
மேலும் காய்ச்சல் மற்றும் சளியை போக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக் காய் உதவுகின்றது. தாய்ப்பால் சுரப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் முருங்கைக்காய் ஆண்மை குறைபாடு தொடர்பான பிரச்சிகைகளை சரிசெய்து ஆண்மையை அதிகரிக்க செய்யும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு முருங்கைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.