ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.