
ரஜினி வீட்டில் கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் குழந்தையின் காதுகுத்து விழா புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சௌந்தர்யா 2010ம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து, இந்த தம்பதிகளுக்கு வேத் என்ற மகன் இருக்கும் நிலையில் இந்த ஜோடிகளும் பிரிந்தனர்.
பின்பு விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யாவிற்கு இரண்டாவதாக வீர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது இந்த குழந்தைக்கு காதுகுத்து விழா ஒன்றினை நடத்தியுள்ளனர். இதற்கு ரஜினி தாமதமாக கலந்து கொண்டு பேரக்குழந்தையை வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.