கீரையை எப்படி சமைக்கு வேண்டும்
கீரையை சமைப்பதற்கு முன்பு 3 அல்லது 4 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, பின்பு வடிகட்டி, சாதாரண வெப்பநிலையில் கீரையை பரப்பி வைக்கவும்.
சற்று உலர்ந்ததும் கீரையின் தண்டை அகற்றி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சுடு செய்த பின்பு நறுக்கிய கீரையை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
கீரையில் நச்சு மற்றும் வாத தாக்கத்தினை குறைப்பதற்கு மஞ்சள், திப்பிலி, சீரகம், கொத்தமல்லி இலை, வெந்தய இலை போன்ற மசாலாவைச சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே, கீரை சாப்பிடுவதற்கு முன் அவற்றை நன்றாக சமைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.