விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள்
இந்து மக்கள் நாம் எந்த காரியம் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதன்படி, எந்த தொழில் துவங்கும் பொழுதும் அதனை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
இது போன்ற சிறப்புமிக்க கடவுளை வழிபடும் நோக்கில் தான் ஆவணி மாதம் வளர்பிறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தி நேரங்களில் வாழை இலை போட்டு கடவுளுக்கு என்று தனியாக சில பொருட்களை வைத்து பூஜை பண்ணுவார்கள்.
இது போன்ற நேரங்களில் அந்த இலையில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், அறுகம்புல், வாழைப்பழம், தேங்காய் உட்பட பல பொருட்கள் வைக்கப்படுகின்றன.