
டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்களுக்கு விரைவில் தட்டுப்பாடு
டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்கள் குவாட்டர் ரூ.140-க்கு கீழ் விற்கப்படுகிறது.
கூலித்தொழிலாளர்கள் இந்த ரக மதுபானத்தைதான் நாடி செல்கிறார்கள். இந்த நிலையில் உற்பத்தி குறைப்பால் டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சாதாரண ரக மதுபானங்கள் உற்பத்தியை குறைக்கக்கூடாது என்று ஆலைகள் நிர்வாகத்துக்கு ‘டாஸ்மாக்’ நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மதுபான ஆலைகள் சார்பில் மதுபானங்கள் உற்பத்தி செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பேச்சுவார்த்தையில் உள்ளது. இதில் மதுபான ஆலைகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.