தந்தையை சந்தித்த விஜய்
விஜய் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு தன் தாய் தந்தையரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது.
அண்மைக்காலமாக விஜய் குறித்து பல சர்ச்சையான விடயங்கள் பரவி வந்தது. அதில் விஜய் தன் தாய், தந்தையை கண்டுக்கொள்வதில்லை என பல செய்திகள் வந்தது இந்நிலையில் அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என சொல்லும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
மேலும், சிலமாதங்களாக உடலில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதனால் அவரையும் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.