ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது – இஸ்ரோ

ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது – இஸ்ரோ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 10-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 15ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Previous post 1000வது கோவில் கும்பாபிஷேகம் மு.க.ஸ்டாலின்
Next post அமெரிக்காவில் இருந்து சிம்பிளாக வந்திறங்கிய விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *