தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, சி.பி.ராஜ், லதா சேதுபதி, விக்னேஷ் சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தின சபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளி முத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.