மாதவிடாய் கோளாறு – சிறந்த வீட்டு வைத்தியம்

மாதவிடாய் கோளாறு – சிறந்த வீட்டு வைத்தியம்

மாதவிடாய் சுழற்சியானது மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளிலிருந்து அடுத்த நாள் வரை கணக்கிடப்படுகிறது. சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும், ஆனால் இது நபருக்கு நபர் மற்றும் மாதத்திற்கு மாதம் மாறுபடும்.

ஒவ்வொரு 24 முதல் 38 நாட்களுக்கும் வந்தால், உங்கள் மாதவிடாய் வழக்கமானதாகக் கருதப்படுகிறது. மாதவிடாய்க்கு இடைப்பட்ட நேரம் மாறிக்கொண்டே இருந்தால் மற்றும் உங்கள் மாதவிடாய் முன்கூட்டியே அல்லது அதற்குப் பிறகு வந்தால் உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாகக் கருதப்படுகிறது.

சிகிச்சையானது உங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதில் தங்கியுள்ளது, ஆனால் உங்கள் சுழற்சியை மீட்டெடுக்க நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம்.

அந்தவகையில் மாதவிடாய் பிரச்சினைகளை வீட்டிலேயே சரி செய்ய சிறந்த வீட்டு வைத்தியம்

வெள்ளை செம்பருத்தி பூக்களின் மொட்டுகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து உள்ளிருக்கும் மகரந்த காம்பை நீக்கி விட வேண்டும். இதனுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து மைய அரைக்கவும். அதிக நீர்ப்பதமாக இருக்க வேண்டாம். பேஸ்ட் போல் இருந்தால் போதும். இதை தினமும் இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.

உணவுக்கு பின்பு அல்லது முன்பு இரண்டு மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட உடன் எதையும் சாப்பிட வேண்டாம். தொடர்ந்து ஏழு நாட்கள் வரை தவறாமல் சாப்பிட வேண்டும்.

ஆயுர்வேதத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி பூக்கள் உயர்ந்த மருத்துவ குணங்களை கொண்டதாக சொல்லப்படுகிறது. இது ஆரோக்கியம் போன்று அழகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வாக பயன்படுத்துகிறது. கருப்பை நோய்களை போக்கும் தன்மை செம்பருத்திக்கு உண்டு.

புளிய மரத்தின் நுனி கிளைகளை கிள்ளி இலைகளை தனியாக எடுக்கவும். இந்த இலைகளின் மையத்தில் இருக்கும் நரம்புகளை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இலைகள் தேவையில்லை. இந்த நரம்புகள் ஒரு பிடி அளவு சேர்த்து அதை சுத்தமாக அலசி இதையும் அரிசி கழுவிய நீரில் சேர்த்து மசித்து இதை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஒருவாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். புளிய மரத்தின் இலைகள் மாதவிடாய் சிக்கல்களை தீர்ப்பதோடு அது வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் மருந்தாகும்.

இந்த வைத்தியம் எளிதானது.ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு கருப்பு எள் பலனளிக்கும். கால் டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் சுத்தம் செய்து கழுவி எடுத்த கருப்பு எள்ளை சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு டீஸ்பூன் வெல்லம் கலந்து வெல்லம் கரைந்ததும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி குடிக்கவும். இதை ஆறவைத்து குடித்தால் மாதவிடாய் சீராகும்.

Previous post உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து
Next post பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பை உதறிய நடிகை – ரித்திகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *