உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ… இந்தாம்மா… என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

நடிகர் மாரிமுத்து எப்பொழுது நேரத்தினை சரியாக கடைபிடிப்பவர் என்பதால் காலை 6.30 மணிக்கு டப்பிங் செய்ய வந்துள்ளார். வரும் போது ஆரோக்கியமாக வந்தவர் 8 மணி வரை கம்பீரமான குரலில் டப்பிங் செய்துள்ளார்.

பின்பு சற்று அசௌகரியமாக உணர்ந்ததால் ஒரு 10 நிமிடம் பிரேக் கேட்டுள்ளார். டப்பிங் அறையில் இருந்தவரும் சரி என்று கூறியுள்ளார். உடனே ஏசியை ஆன் செய்துவிட்டு Sound Engineer வந்து மாரிமுத்துவை அழைப்பதற்கு வெளியே வந்துள்ளார்.

நெஞ்சுலியுடன் கார் ஓட்டிய மாரிமுத்து

ஆனால் வந்து பார்த்த போது மாரிமுத்துவைக் காணவில்லை. அவர் காரை எடுத்தக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளதை அறிந்து பின்னே சென்றுள்ளனர்.

உடனே வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவமனைக்கு செல்ல ஒரு 100 மீற்றர் இருந்த நிலையில், மூச்சுவிடுவதில் அதிக சிரமம் இருந்ததால், கார் ஓட்ட முடியாது என்று நினைத்து காரை அங்கேயே நிறுத்தியுள்ளார்.

பின்பு நடந்து, அங்கிருந்த செவிலியரை பார்த்து தனக்கு முடியவில்லை என்று கூறவே, தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் இருக்கும் மாரிமுத்துவின் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

Previous post நடிகர் கமல்ஹாசன் – புதிய படத்தின் அப்டேட்
Next post மாதவிடாய் கோளாறு – சிறந்த வீட்டு வைத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *