சாப்பாட்டுடன் தேநீர் குடிக்கலாமா
பொதுவாக நம்மில் சிலர் சாப்பிட்டவுடன் தேநீர் குடிப்பார்கள். இன்னும் சிலர் சாப்பிட்டு கொண்டே தேநீர் குடிப்பார்கள்.
ஆனால் இந்த பழக்கம் சரியான ஆரோக்கியத்தை உடலுக்கு தராது என மருத்தவர்கள் கூறுகின்றார்கள்.
இது போன்ற சந்தேகங்கள் சில நம்முள் இருக்கும். ஆனால் யாரிடம் கேட்பது? என்ன செய்வது என புரியாமல் இருப்போம்.
அந்த வகையில் சாப்பாட்டுடன் தேநீர் குடிக்கலாமா? என்பதனை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் ஆய்வுகளின் பிரகாரம் கூறியுள்ளார்கள். ஏனெனின் தேநீரில் தேயிலை இலைகள் அமிலத்தன்மை கொண்டவை, இது செரிமான செயல்முறையை பாதிக்கும்.
புரத சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், தேநீரில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் அமிலம் செரிமாணத்தை தடைப்படுத்தும்.
சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துவது உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.
இது போன்ற பிரச்சினைகளை தடுக்க வேண்டும் என்றால் சாப்படுவதற்கு முன்பும் பின்பும் தேநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.