பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் – டோனி
நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
‘பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்’ என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது. ஆனால் அவர் கடந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இதனை முகப்பு படமாக வைத்திருப்பதே உண்மை நிலவரம் ஆகும். அப்போது முதல் தற்போது வரை டோனி தனது முகப்பு படத்தை மாற்றாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.