இந்தியாவின் பெயர் “பாரத்” என மாற்றப்படுகிறதா
G20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினருக்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் “இந்திய குடியரசு தலைவர்” என்பதற்கு பதிலாக “பாரத் குடியரசு தலைவர்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தை பாதிக்க கூடிய காரியங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஜி20 நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த 19 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த மாதத்தின் இடைப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவும் தீர்மானம் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.