சூரியசக்தி பயன்படுத்தப் படும் சந்தர்ப்பங்கள்
சூரிய சக்தியை பகல் நேரத்தில் மின்சாரம் பயன்படுத்தாமல், 80 சதவீத மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கலாம்.இதன்மூலம் மோட்டார் பம்ப் தவிர்த்து, விளக்கு, ஃபேன், குளிர்ப்பதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, போன்ற சாதனங்கள் இயக்கலாம்.
நம்நாடு வெப்பநாடு. உலகிலேயே இந்தியாவில் தான் வருடத்திற்கு அதிகபட்சமாக 300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.எனவே சூரிய சக்தி மூலம் வீட்டுத்தேவை மின்சாரத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பெரும்பாலும் இப்போது இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை சேமித்து, மின்வெட்டு சமயத்தில் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது.
இந்த சூரிய மின் சக்தியை பெற, வீடுகளில் அமைக்க, யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
சூரிய சக்தியை பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்திலும் பயன்படும்.
சூரியவெப்பத்தைவிட சூரிய ஒளியே மின்சாரம் உற்பத்திக்கு உதவுகிறது.
எங்கள் வீட்டில் 6 வருடங்களுக்கு முன் 2 கேவி சூரியத் தகடு பொருத்தினோம். வீட்டின் தொலைக்காட்சி, ஃபேன், விளக்குகள் அனைத்தும் அதில்தான் இயங்குகிறது.மிக்சியும் அதிலேயே இயக்கினோம்.
இன்வெர்ட்டர் இப்போது அதிக பாரம் தாங்கமுடியாமல் ஏதேனும் பிரச்சினை தருவதால், மிக்சி, கிரைண்டர், குளிர்ப்பதனப் பெட்டி, ஆகியவற்றை மின்சாரத்தை பயன்படுத்தி, உபயோகப்படுத்துகிறோம்.
மழைக்காலம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சேமிக்கப்படும் சூரிய சக்தி மின்சாரமே, இரவிலும் ஃபேன், விளக்கு, தொலைக்காட்சி ஆகியன இயங்கவும், விடியும் வரை ஃபேன் ஓடவும் உபயோகமாக உள்ளது.