ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம்
வால்நட் மட்டுமல்ல, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளை நன்கு கழுவிய பின்னர் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.நானும் அவ்வாறே.பாதாம், வால்நட் என்று ஊறவைத்த நீரைக் குடிப்பதில்லை.பருப்புகளை பாதுகாக்க பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் ஏதேனும் தோலின் மேல் படிந்திருக்கும் என்ற எண்ணமே…
” உலர் பழங்களின் ராஜா ” என்றழைக்கப்படும் வால்நட் மற்ற எல்லா வகை உலர் பழங்களை விட சற்று சுவையிலும் ஆரோக்கியமான விசயத்திலும் வேறுபட்டு காணப்படுகிறது. இது மூளைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளது. பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது .
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த வால்நட் மட்டுமின்றி பாதாம் பருப்புகளையும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும்.
ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம் :
வால்நட் பருப்பில் புரதம், கால்சியம் ,மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் ,தாமிரம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் மிக அதிகம். இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொழுப்பை எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது .
உடல் எடையை குறைக்க உதவும்:
அதிகரித்து வரும் உடல் எடையைக் குறைக்க தினமும் ஊற வைத்த வால்நட்சை சாப்பிட வேண்டும். ஏனெனில் புரதத்தின் அளவு அதிகமாகவும் ,கலோரிகள் குறைவாகவும் காணப்படுகிறது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அஜீரணம், வாயு மற்றும் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட் ஊற வைத்த நீரை குடிப்பது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ,வயிற்றில் காலையில் சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்க செய்யலாம். உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது .எலும்புகள் வலுவாக இருக்கவும், அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் உலர் பழங்களில் ஒன்றாக இது உள்ளது. தினமும் இரண்டு அல்லது மூன்று ஊற வைத்த வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.
ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால், அதிலுள்ள வைட்டமின் பி 7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, உதிர்வதைத் குறைத்து, வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெளிப்புறத் தோலுக்கு ஈரப்பதத்தை தந்து,சருமச் சுருக்கங்கள் வருவதைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணையப் புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக அறியப்படுகிறது.