திருஅருள் வேண்டும் வரலட்சுமி விரதம்
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி நோன்பு எனப்படும் வரலட்சுமி விரதம் .
16 வகை செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமி அருள் கிடைக்க ,லட்சுமி தேவியை மகிழ்விக்க வேண்டி இந்த வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயன் அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, அதாவது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்த வழிபாட்டின் மூலம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற்று செல்வம், பெருமை, குழந்தை, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் போன்றவற்றை பெற வேண்டும். பெண்கள் தங்களின் சுமங்கலி வாழ்வுக்காகவும், கணவர் ,குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும் கடைபிடித்து, மகாலட்சுமியின் அருளைப் பெற்று, வாழ்க