Bigg Boss ஆட்டத்தை அடிக்க யாரும் இல்லையா?
“பிக்பாஸ் வீட்டில் அருணின் ஆட்டத்தை அடக்க யாருமே இல்லையா?” என புலம்பும் ஜாக்குலின் செயல் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
Bigg Boss
ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.
இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வாரங்கள் கடந்துள்ளது.
அருணை எதிர்க்கும் ஜாக்குலின்
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அருணின் விளையாட்டு வித்தியாசமாக உள்ளது.
அந்த வகையில் முத்துகுமரன் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதால் முத்துகுமரனின் விளையாட்டை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என அருண் முயற்சி செய்து வருகிறார்.
அருணை பல தடவைகள் நேராக எதிர்த்த ஜாக்குலின் முத்துகுமரனுடன் இணைந்து,“ அருணை அடக்க யாரும் இல்லையா? இவர் ஏன் இப்படி செய்கிறார்?” எனக் கூறியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 13th Dec 24 – Promo 2