Bigg Boss: டாய்லெட் போறது கூட தப்பா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பிரச்சனை செய்து வருகின்றனர்.
Bigg Boss
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
பிக் பாஸ் வாரா வாரம் புதிய டாஸ்க் கொடுப்பதும், அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அடித்துக் கொண்டு சுயரூபத்தை வெளிக் கொண்டுவருவதும் வழக்கமான காரியமாக இருக்கின்றது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளது. அதாவது தொழிற்சாலை அமைக்கப்பட்டு, அதில் பாதி போட்டியாளர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
தொழிலாளர்களை ஒடுக்கி வேலை வாங்கும் இடத்தில் இருக்கும் மேலதிகாரிகள் அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தற்போது அருணை பாத்ரூம் கூட விடாமல் பழிதீர்த்து வருகின்றனர். இதற்காக தொழிலாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 11th Dec 24 – Promo 3