தொழிலாளர்களின் தேர்வுக்கு எதிராக நிற்கும் ஜாக்குலின்
பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
Bigg Boss
தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது 60 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரங்களில் இல்லாதவாறு நேற்றைய தினம் டபுள் எவிக்ஷன் கொடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக முத்துக்குமரன் அதிக ஓட்டுகளால் முன்னணியில் இருந்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா என வாக்குகளால் பிக்பாஸ் வீட்டில் தங்களின் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு சமயத்தில், முத்துகுமரரின் ஆட்டத்தில் கடந்த சில நாட்களாக சரிவு ஏற்பட்டுள்ளது.
நாமினேஷன் free யாருக்கு?
இந்த நிலையில், இன்றைய தினம் நாமினேஷன் free-க்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதன்படி, முதலாளித்துவ அணியில் இருந்து சௌந்தர்யாவும், தொழிலாளர்கள் அணியில் இருந்து ரஞ்சித்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக இரு அணியில் உள்ளவர்களும் முரணான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
அதில், ஜாக்குலின் “ தொழிலாளர்கள் அணியிலிருந்து தெரிவு செய்வதற்காக நிறைய பேர் இருந்தும் ரஞ்சித் தெரிவில் எனக்கு உடன்பாடு இல்லை..” எனக் கூறியுள்ளார். இந்த வாதத்தில் பிக்பாஸ் என்ன முடிவு எடுப்பார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 11th Dec 24 – Promo 1