சௌந்தர்யா ஜாக்குலின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய பிக்பாஸ்
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரு தினங்களாக ஓவராக பேசிய சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் இருவருக்கும் பிக்பாஸ் தக்க பதிலடிக் கொடுத்துள்ளார்.
Bigg Boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் டெவில்- தேவதைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீடே இப்போது இரத்தக்களரியாக மாறி உள்ளது.
நேற்றைய தினம் போட்டியாளர்களின் அலப்பறைக்கு எல்லை இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது. இதனால் காலையிலிருந்து 6 ப்ரோமோக்கள் வெளிவந்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் டெவில் குழுவில் உள்ள போட்டியாளர்கள் வரம்பு முறை இல்லாமல் தேவதைகளை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
என்ன தான் டாஸ்க்காக இருந்தாலும் ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல் மற்ற போட்டியாளர்களை நடத்தி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. ஆரம்பத்தில் சாதுவாக இருந்த போட்டியாளர்கள் தற்போது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டார்கள்.
இதனால் தினமும் ஒரு சண்டை வெடித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜாக்குலின், சௌந்தர்யா, ரயான், அருண் ஆகியோரின் குணங்கள் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது.
சௌந்தர்யா ஆட்டத்திற்கு முடிவுக்கட்டிய பிக்பாஸ்
இந்த நிலையில், இன்றைய தினம் டெவில்- ஏஞ்சல்கள் டாஸ்க் முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக டாஸ்க்களில் சரியாக பங்கெடுக்காத போட்டியாளராக சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தண்டனையாக பிக்பாஸ் அனுப்பும் உணவுகளை தான் இருவரும் சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிக்பாஸ் அனுப்பிய உணவை இருவரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர் அனுப்பிய உணவில் கொஞ்சம் கூட உப்பு போடவில்லையாம். இதுகுறித்து சௌந்தர்யா வருத்தம் அடைகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 6th Dec 24 – Promo 1