Bigg Boss: வலியால் துடித்த சாச்சனா
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் சாச்சனா வயிறு வலி காரணமாக கஷ்டப்பட்ட நிலையில், அவரை கை தாங்கலாக கன்பெஷன் அறைக்கு அழைத்துச் சென்ற அருண் கடைசியில் சிக்கலில் மாட்டியுள்ளார்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ரவீந்தர், அர்னவ் என இரண்டு பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், இந்த வாரத்தில் ஜாக்குலின், சத்யா, பவித்ரா, அன்ஷிதா, சவுந்தர்யா, தர்ஷா, முத்துகுமரன், அருண் என 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சாச்சனா உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டதால் அவருக்கு அருண் உதவி செய்துள்ளார். அதாவது சாச்சனாவை கன்பெஷன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கன்பெஷன் அறைக்கு செல்லும் போது நடுவே இருந்த கோட்டை தாண்டி சென்றுள்ளதால் அருண் சிக்கலில் மாட்டியுள்ளார். ஆனாலும் பெண்கள் அணியினர் இதை காரணமாக வைத்து ஆண்கள் அணியினரை இவ்வாறு குற்றப்படுத்தியுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 22th Oct 24 – Promo 1