Bigg Boss தீபாவளி ஷ்பெஷலாக இறக்கப்படும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 8 இல் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் இரண்டு வாரமும் சூடு பிடிக்காமல் இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் சாச்சனா – அன்ஷிதா இடையே நடந்த சண்டை தான் ஒரு எபிசோட்டாகவே இருந்தது. தற்போது இருவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிச் செல்லும் நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளார் பிக்பாஸ்.
கடந்த சீசனில் இதேபோல் ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டதில் அதில் இருந்து ஒருவரான அர்ச்சனா தான் டைட்டில் வெற்றி பெற்றார்.
அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறங்க உள்ள அந்த போட்டியாளர்கள் முறைப்படி செவ்வந்தி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்த திவ்யா ஸ்ரீதர், மிமிக்ரி ஆர்டிஸ்டும் நடிகருமான டிஎஸ்கே, மற்றொருவர் வினோத் பாபு, இவர் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகனாக நடித்திருந்தார்.
இது தவிர சூர்யாவின் ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜாவாக நடித்த ஐஸ்வர்யா பாஸ்கரனும் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளனராம். எஞ்சியுள்ள ஒரு போட்டியாளரை மட்டும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 20th Oct24