Bigg Boss பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாகும் பிரபல சீரியல் நடிகை
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே செல்ல உள்ள பிரபல சீரியல் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
வைல்ட் கார்டு என்ட்ரி
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில் சிறப்பாக நடந்துகொண்டு வருகின்றது. இதை தற்போது விஜய் சேதுபதி மதன் முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் வார இறுதியில் நடந்த எலிமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்ற ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் ஆனார்.தற்போது நிகழ்ச்சியில் அர்னவ், முத்துக்குமரன், கானா ஜெஃப்ரி, அருண் பிரசாத், சத்யா, தீபக், ரஞ்சித், விஜே விஷால், பவித்ரா, ஆர்.ஜே.ஆனந்தி, சுனிதா, தர்ஷிகா, சாச்சனா, ஜாக்குலின், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அன்ஷிதா ஆகிய 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் இந்த வாரம் தர்ஷா குப்தா அல்லது அர்னவ் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளதால் அவாகள் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் இரண்டாவது போட்டியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ரியாக, பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் என்ற தகவல் கசிந்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பது உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நடிகை திவ்யா ஸ்ரீதர் உள்ளே சென்றால் தரமான சம்பவம் நடக்க உள்ளது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 20th Oct24