Bigg Boss விஜய் சேதுதியிடம் பொய் பேசி மாட்டிக்கொண்ட தர்ஷா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது இரண்டாவது ப்ரமொ வெளியாகி உள்ளது. இதில் தர்ஷா குப்தா பொய் சொல்லி அனைவரிடமும் மாட்டிக்கொண்டு பதில் கூறாமல் தடுமாறுகிறார்.
Bigg Boss 8
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில் சிறப்பாக நடந்துகொண்டு வருகின்றது. இதை தற்போது விஜய் சேதுபதி முதன் முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் வார இறுதியில் நடந்த எலிமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்ற ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் ஆனார்.தற்போது நிகழ்ச்சியில் அர்னவ், முத்துக்குமரன், கானா ஜெஃப்ரி, அருண் பிரசாத், சத்யா, தீபக், ரஞ்சித், விஜே விஷால், பவித்ரா, ஆர்.ஜே.ஆனந்தி, சுனிதா, தர்ஷிகா, சாச்சனா, ஜாக்குலின், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அன்ஷிதா ஆகிய 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் இந்த வாரம் தர்ஷா குப்தா அல்லது அர்னவ் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளதால் அவாகள் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரமொவில் தர்ஷா குப்தா பொய் சொல்லி மாட்டிக்கொண்டு கெள்விக்கு தைரியமாக பதில் கூற முடியாமல் தவிக்கிறார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 20th Oct24 Promo 2