Bigg Boss: இந்த சண்டையில் முட்டை அவசியமா? விஜய் சேதுபதி அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி தர்ஷா குப்தாவை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். 18 போட்டியாளர்களில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியிலிருந்து முதல் நபராக கடந்த வாரம் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.
தற்போது 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில், 10 போட்டியாளர்கள் வரும் வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்று ஜாக்குலினை நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை என்பதால் விஜய் சேதுபதி கடந்த சில தினங்களாக நடைபெற்ற பிரச்சனையை பேசி தீர்க்கின்றார். இதில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் தர்ஷா குப்தாவை கேள்வி எழுப்பியுள்ளார்.
வீட்டில் குழாய் அடி சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கு இந்த இடத்தில் அந்த முட்டை அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு தர்ஷா குப்தா மற்றவர்கள் மீது பழி கூறுகின்றார்.
ஆனால் பழி சுமத்தப்பட்டவர்கள் தங்களது நியாயத்தை கூறிய பின்பு தர்ஷாவிடம் என்ன பதில் கொடுக்க போகிறீர்கள் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 19th Oct24 Promo 3