Bigg Boss கழிப்பறையை எட்டி பார்த்த போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களின் கழிப்பறையை ஆண் போட்டியாளர் ஒருவர் எட்டி பார்த்த போது அவரை ஜாக்குலின் எச்சரித்துள்ளார்.
Bigg boss 8
ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள். கமல்ஹாசன் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என பயந்த போது விஜய் சேதுபதி கமல்ஹாசனை விட பிக்பாஸை கலகலப்பாக கொண்டு செல்கிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 2 ஆவது வாரத்திற்கான தலைவராக சத்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
பெண்களின் கழிப்பறையை எட்டிப் பார்த்தாரா?
இந்த நிலையில், ஆண் போட்டியாளர் ஒருவர் பெண்களின் கழிப்பறையை எட்டிப் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆண் அணியினரிடம் இருந்த பாத்திரம் கழுவும் லிக்யூடை ஜாக்லின் திருடி கொண்டு போய் பெண்களின் கழிப்பறையில் வைத்திருக்கிறார்.
அதனை திருப்பி தரும்படி ஆண் போட்டியாளர்கள் சட்டை போட்டதும். அதனை ஒரு கப்பில் ஊற்றி வைத்து விட்டு மிகுதியை திருப்பி கொடுத்திருக்கிறார். இதனை ஜெஃப்ரி எட்டி பார்த்திருக்கிறார். இதனை கவனித்த ஜாக்குலின், “ நீ ஏன் எங்க பாத்ரூமை எட்டி பாக்குற? ரொம்ப தப்பா இருக்கு..” என எச்சரித்துள்ளார்.
திருட்டு வேலையை செய்தததை அவர் கண்டுபிடிக்க முயன்ற போது, இது போன்று கூறியதுடன், “இவன் ரொம்ப தப்பா நடந்துக்கிறான் என்று சௌந்தர்யா நாமினேஷன் செய்திருக்கிறார்…” அதுவும் ஜெஃப்ரி மீது பெண்கள் பற்றிய நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே பெண் போட்டியாளர்கள் செய்கிறார்கள்.
இருந்த போதிலும் இவற்றை பார்த்து கொண்டிருக்கும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஜெஃப்ரியை ஓரம் கட்டுவதற்காகவே இப்படியான செயல்கள செய்கிறீர்களா? எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இந்த வாரத்தில் விஜய் சேதுபதி தலையிடுவாரா? என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 16th Oct 24 – Promo 2