Bigg Boss பெண் போட்டியாளரை குறி வைத்து தாக்கும் Housemates
பிக்பாஸ் 8ம் சீசனில் தற்போது இரண்டாவது வாரத்தில் நாமினேஷன் செயன்முறை நடந்து முடிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது எட்டாவது சீசனில் உள் நுழைந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பமானவுடன் எலிமினேட்டாகி சாச்சனா வெளியில் சென்றார். அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்கள் தேர்வு அடிப்படையில் நேற்றைய தினம் ரவீந்தர் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் செயன்முறை நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில், இந்த வாரமும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் மாறி மாறி நாமினேஷன் செய்து கொண்டார்கள். இதில் பெண்கள் அணியில் சற்று வேறுபாடுகள் காணப்படுகின்றது.
குறி வைத்து தாக்கப்படும் சௌந்தர்யா
மாறாக ஆண்கள் அனைவரும் இந்த வாரம் சௌந்தர்யாவை வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்த பின்னர் நாமினேஷனுக்கு சென்றுள்ளார். ஆனால் பெண்கள் அணிக்காக ஆண்கள் அணியில் இருக்கும் பெண் போட்டியாளருடம் இதற்கு உடந்தையாக இருப்பது போன்று தெரிகிறது.
ஆண்கள் அணியில் இருந்து அதிக போட்டியாளர்களால் சௌந்தர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம் சௌந்தர்யா – 7, ரஞ்சித் – 5, ஜெப்ரி – 3, முத்துகுமரன் – 3, அர்னாவ் – 2, விஷால் -2, தர்ஷா -2, சாச்சனா – 2, தீபக் – நேரடி நாமினேஷன், ஜாக்குலின் – நேரடி நாமினேஷன் ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கிறார்கள்.
மக்களால் அதிகமாக விரும்பப்படும் சௌந்தர்யா தற்போது வரை மக்கள் வாக்குகள் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் வெளியேறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 15th Oct 24 – Promo 1