பிக் பாஸ் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டிலிருந்து விஜய் சேதுபதியின் ரீல் மகளான சாச்சனா முதல் நாளிலே வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
வீட்டில் முதல்நாளே பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கு செக் வைத்த நிலையில், இதனால் முதல் நாளிலேயே மோதல் ஏற்பட்டது.
மேலும் இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு எவிக்ஷனும் ஏற்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.
ஆனால் பார்வையாளர்கள் இது உண்மை தானா? அடுத்து வைல்டு கார்டில் சாச்சனா உள்ளே வருவாரா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8 | 7th October 2024 – Promo 3
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்