சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிரட்டலான ‘வேட்டையன்’ ட்ரெய்லர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடபில் தயாராகிவரும் வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
வேட்டையன் திரைப்படம்
ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாக வெளிவரவிருக்கும் வேட்டையன் திரைப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
TJ ஞானவேல் கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் திகதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்குவரவுள்ளது. இந்த திரைப்படத்துக்காக ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கின்றது.
வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
#Vettaiyan #VettaiyanTrailer #Rajinikanth #Anirudh