பிக்பாஸ் சீசன் – 8 அப்பேட்- 16 பிரபலங்கள்
பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் விவரங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8 அப்டேட்
ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வட்டாரங்களை துருவிய போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள்
இந்த நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. வலைத்தளங்களில் இருக்கும் வதந்திகளுக்கு இந்த பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
மேலும், ரசிகர்கள் சில பிரபலங்களை நினைத்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் லிஸ்ட்டில் இல்லாத போதும், அவர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
விஷால் (பாக்கியலட்சுமி நடிகர்)
ஐஸ்வர்யா பாஸ்கரன் TSK (காமெடியன்)
விடிவி கணேஷ் கோகுல்நாத் (மானாட மயிலாட புகழ் டான்சர், நடிகர்)
பால் டப்பா (பாடகர்)
சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை)
தர்ஷிகா (பொன்னி சீரியல் நடிகை)
தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
சுனிதா (குக் வித் கோமாளி காமெடியன்)
சஞ்சனா (மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர்)
அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)
அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
அன்பு (நடிகர் மயில்சாமி மகன்)
சவுண்ட் சரோஜா ரோலில் நடித்து பிரபலம் ஆன ஐஸ்வர்யா பாஸ்கரன் பிக் பாஸ் வர போகிறாராம்.
#VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்