ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள்

ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள்

சிதம்பரத்தில் பத்து நாட்களும், ஏனைய தலங்களில் இந்நாள் விஷேசமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பகவானுக்கு புனிதமான சிறப்பு அபிஷேகம் செய்வது திருமஞ்சனம் எனப்படும். திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் புனித நிகழ்வாகும். ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறும்.

சிவ பெருமானின் 64 வடிவங்களில் ஒன்று நடராஜர் வடிவம். சிவலிங்கத்திற்கு அடுத்தபடியாக நடராஜ வழிபாடு உலகமெங்கும் இருந்து வருவதை அறிகிறோம். தொன்மையிலிருந்தே நடராஜருக்கு, வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.

அதில் ஆனித் திருமஞ்சனம் என்பது மிகவும் சிறப்பானது. சிதம்பரத்தில் பத்து நாட்களும், ஏனைய தலங்களில் இந்நாள் விஷேசமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பஞ்சாட்சரத்தையும், பஞ்ச கிருத்தியங்களையும் விளக்க வல்ல வடிவமாகவே உள்ளது நடராஜர் வடிவம்.

ஆனந்த தாண்டவ கோலத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு, ஐந்து சபைகள் உள்ளன. அதில், பொற்சபை எனும் “பொன்னம்பலம்” சிதம்பரத்தில் உள்ளது. தில்லைக் கூத்தன், ஆடலரசன், கூத்த பிரான் என்றெல்லாம் நடராஜரை அழைத்து மகிழ்வர்.

“பக்தி பூர்வமாக இருக்க, நாம் துறவறம் பூண வேண்டாம். இல்லறத்தில் இருந்த படியே, எல்லாக் கடமைகளையும் செய்யலாம். ஆனால் மனம் இறைவனிடம் இருக்கட்டும்” -ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை கூறினார்.
“தேனினும் இனிய வாழ்வு அமைய, தில்லைக் கூத்தனை ஆனியில் வழிபடு” என்பார்கள்.

ஏனெனில் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். சூரியன், மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலமிது. இந்த மாதத்தில் தெய்வ தரிசனம் செய்து பலன், பேறு புகழ் பெற்றவர்கள் நிறைய என பலரும் கூறுவர். பிறவி எனும் விஷத்தைச் போக்கும் மருத்துவராக இவரைப் பாடல்களில் வர்ணித்துப் பலரும் மகிழ்ந்துள்ளனர்.

சகல சிவாலயங்களிலும், நடராஜருக்கு அபிஷேகம் செய்து, ரிஷப வாகனத்தில் ஈஸ்வரியுடன் திருவீதி உலா நடைபெறும்.

காட்சிதரும் கடவுளை அன்றய தினம் கண்டு களித்தால், வீழ்ச்சி இல்லாத வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.

“Chidambaram Town is considered the centre of the universe. Chidambaram is heart and the lord’s dance of anand, bliss is his Grace”
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்தனர். மேலும் பஞ்ச கிருத்தியங்களான, ஆக்கல், காத்தல், அழித்தல், அருளள், மறைத்தல் ஆகியவைகளை நடனத்தின்போது நடத்துகிறார் என்பர்.

இடைவிடாது ஆடிக் கொண்டே உலக இயக்கத்திற்கு அடி கோலுகிறார். ஆகவே தான் அணு முதல் ஆகாயம் வரை அசைந்து இயங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆனி உத்திர நாளில்தான் சிவனார், நமக்கு திருவாசகம் தந்த மாணிக்கவாசகருக்கு, குருந்தை மரத்தடியில், உபதேசம் செய்தார்.
திருமஞ்சனம் காண, தீர்க்க சுமங்கலி வாழ்வு, நல்ல கணவன், குழந்தைகள் அமைவது, நல்ல இடத்தில் திருமணமாவது போன்ற நல்ல காரியங்கள் அமையும் என்பர்.

ஆனி-மார்கழி இறை வழிபாட்டிற்கு உகந்தது. பால், சந்தனம், தயிர், பன்னீர், இளநீர் போன்ற 16-க்கும் மேற்பட்ட குளிர்ந்த பொருட்களால் ஆனித் திருமஞ்சனம் செய்வர். ஆனித் திருமஞ்சனத்தை ஆரம்பித்து வைத்தவர், ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் என்பர்.

சிதம்பரத்தில் இவ்விழா பிரும்மோட்சவமாகவே கொண்டாடப்படுகிறது. 9ம் நாளில் மூலவரே தேரில் எழுந்தருளி உலா வந்து ஆசி வழங்குவது கண்கொள்ளா காட்சி.

இறைவனுக்கு பூஜைகள் நடைபெறும்போது, எல்லா கோவில்களிலும் ஆலயமணி ஒலிக்கும். சிதம்பரம் நடராஜர் ஆலய மணி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒலிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் இந்த மணி ஒலிக்கும். இதை “நாழிகை மணி” என்பர். காரணம், இது நேரத்தைக் குறிக்குமாறு ஒலிக்கப்படுகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் தவிர, மற்ற எல்லாக் கோயில்களின் சிவலிங்கங்களும், சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்த ஜாம் பூஜையின் போது இங்கு ஒடுங்குவதாக ஐதீகம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரவு 10 மணிக்கு, அர்த்த ஜாம பூஜை நடத்தப்படும்.

நாழிகைமணி ஒலித்த பின்னர்தான் இந்த பூஜையை நடத்துவார்கள்.

பக்தி மண்டலி சார்பாக ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பெஸன்ட் நகரில், வருடா வருடம் ஆனித் திருமஞ்சனம் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

“பொன்னார் மேனியனே

புலித்தோலை அரைக்கசைத்து

பின்னர் செஞ்சடை மேல்

மிளிர் கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே

மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால்

இனியாரை நினைக்கேனே”

அன்று சிவனின் ஆலயம் சென்று அவரது அருளைப் பெறுவோம்.

Previous post புகழே எல்லாம் பறந்து Fy புது வீடியோ வெளியாகி
Next post Bigg Boss செல்லும் குழந்தை நட்சத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *