
குழந்தைகளுக்காக அனைவரிடமும் சண்டையிடும் நயன்தாரா
நடிகை நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் போது, குழந்தைகளுக்காக பலரிடம் சண்டையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.
சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா, காணொளியையும் வெளியிட்டிருந்தார். மேலும் மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
மகன்களுக்காக சண்டை
நடிகை நயன்தாரா சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில், அங்கு மகன்களுடன் விளையாடுவதற்கு கீழே வருவாராம்.
அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் சவாரிக்கு அங்கு வந்தபோது, அவரிடம் குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக ஆட்டோ ஓட்டுறீங்க என்று சண்டையிட்டுள்ளார்.
இதே போன் உணவு டெலிவரி செய்ய வந்த நபர், சத்தமாக போன் பேசியதால், குழந்தைகளுக்கு தொந்தரவாக இருப்பதால் அவரிடமும் சண்டை போட்டுள்ளார்.
அமைதியாக இருக்கும் நயன்தாராவா இப்படி சண்டை போட்டுள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது நயன்தாரா சொந்தமாக போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா ஒன்றினை கட்டி அங்கு குடியேறியுள்ளார். இந்த சண்டை விடயத்தினை சமூக வலைப் பேச்சாளர் அந்தணன் கூறியுள்ளார்.